தமிழ்நாடு யாதவ மகா சபை சார்பில் இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் 268 வது குருபூஜை விழா திருச்சி பழைய பால்பண்ணை புதிய வெங்காய மண்டி வணிக வளாகத்தில் இன்று நடைபெற்றது இவ்விழாவிற்கு திருச்சி வெங்காய தரவு மண்டி வர்த்தக சங்கத்தின் தலைவர் வெள்ளையப்பன் யாதவ் தலைமை தாங்கினார் முன்னதாக திருச்சி மாவட்ட யாதவ மகாசபை தலைவர் தங்கராஜ் வரவேற்புரை ஆற்றினார். ஏ விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் கலந்துகொண்டு சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்வில் மாநில செயலாளர் தமிழ்ச்செல்வம் மாநில செயலாளர் ஸ்ரீதர் யாதவ மகாசபை திருச்சி மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் ஸ்ரீரங்கம் அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் விழாவில் யாதவ சமூகத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும் இதில் யாதவ மகா சபை சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.