திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முள்ளிக்கரும்பூர் கிராமத்தில் சுற்றுலா துறையின் சார்பில் நடைபெற்ற சுற்றுலா பொங்கல் விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு கலந்து கொண்டார்.அமைச்சருக்கு யாணை ஊர்வலம் மற்றும் மேளதாளத்துடன் கையில் கரும்புடன் பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
அதன் பின்னர் பாரம்பரிய முறையில் பொங்கலிட்டு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை துவங்கி வைத்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற சுற்றுலா பொங்கல் விழாவில் மயிலாட்டம், ஒயிலாட்டம் கரகாட்டம், குச்சிப்புடி நடனம், தப்பாட்டம் உள்ளிட்டவை தமிழர்களின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் செல்வராஜ், சுற்றுலாத்துறை அலுவலர் ஜெகதீஸ்வரி, மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், அந்தநல்லூர் ஒன்றிய குழு தலைவர் துரைராஜ், மணிகண்டம் ஒன்றிய குழு தலைவர் கமலம் கருப்பையா, முள்ளிக்கிழங்கு ஊராட்சி மன்ற தலைவர் கீதா துரைராஜ், முக்கிய பிரமுகர் வைரமணி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.