தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேலனத்தின் மத்திய குழு கூட்டம் திருச்சி ஹோட்டல் அருணில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது இந்த மத்திய குழு கூட்டத்திற்கு தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மாநில தலைவர் தமிழரசு தலைமை தாங்கினார். இந்த மத்திய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களாக தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்க வேண்டும் எனவும் 127 நகர கூட்டு வங்கிகளை மண்டல அளவில் இணைத்து பலப்படுத்த வேண்டும் எனவும் மாநில மற்றும் நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு ஆணை விரைந்து வெளியிட வேண்டும் எனவும்
கடந்த நிதி ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத்தொகை மிகுதி 10% பதிவாளர் ஏற்றுக்கொண்டபடி உடன் அளித்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஆகஸ்ட் மாதத்தில் சென்னையில் மாநில அளவில் ஒரு நாள் தர்ணா போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. மேலும் இந்த மத்திய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை சம்மேலனத்தின் பொதுச் செயலாளர் சர்வேசன் முன்மொழிய திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் சம்மேலனத்தின் உதவி தலைவருமான ரகுராமன் வழிமொழிய தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேலனத்தில் மத்திய குழு கூட்டத்தில் நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.