காவிரி ஆற்றில் வரும் வெள்ளநீர் கடலில் சென்று வீணாக கலக்கிறது. இந்த வெள்ளை நீரை சேமிக்க காவேரி அயயாறை இணைக்க வேண்டும் அதேபோல் விவசாயிகள் உரிமைகளுக்காக போராடும் பொழுது அவர்கள் மீது போடப்பட்ட 144 வழக்குகளை தள்ளுபடி வேண்டும் தனிநபர் இன்சூரன்ஸ் வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு பென்ஷன் வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.அதனைத் தொடர்ந்து விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கோடை காலத்தில் விவசாயிகள் கஷ்டப்பட்டு தர்பூசணி சாகுபடி செய்கின்றனர் ஆனால் யாரோ ஒருவர் தர்பூசணிக்கு ஊசி போடுகிறார்கள் என்று சொல்கிறார்கள் இதனால் தர்பூசணி கிலோ 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதுபோன்று சொல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் தர்பூசணி விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் கொடுக்க வேண்டும் நெல்லிற்கு பீகார் மற்றும் சண்டிகரில் 100 கிலோவிற்கு 3500 தருகின்றனர் கரும்பிற்கு 6000 தருகின்றனர் அதை தமிழ்நாட்டிலும் தர வேண்டும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளுக்கு கடன் கொடுத்தனர் 7 பைசா தான் வட்டி ஒரு வருடத்திற்குள் கட்டி முடித்து விட்டால் 4 பைசா தான் தற்போது இது அனைத்தையும் எடுத்து விட்டனர் அதேபோன்று மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு வருவதற்கு 500 கோடி ரூபாய் செலவு செய்கிறது இது வந்து விட்டால் ஆண்கள் எல்லாம் ஆண்மை இழந்து விடுவார்கள் பெண்கள் எல்லாம் கருத்தரிக்க மாட்டார்கள். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 15ஆம் தேதி ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் ஆர்ப்பாட்டம் வைத்துள்ளோம் அதனைத் தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் டெல்லி செல்கின்றோம் எங்களுக்கு நியாயம் வேண்டும் கரும்பிற்கு 8,100 தருகிறேன் என்று சொன்னீர்கள் 6000 ஆவது கொடுங்கள் நெல்லுக்கு 5400 கொடுப்பதாக சொன்னீர்கள் 3500 ஆவது கொடுங்கள் என கேட்க உள்ளோம் என தெரிவித்தார்.