திருச்சி குமுளூரைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மீனா இவர்களுக்கு 1மகள் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் வெளிநாட்டில் இருக்கும் தனது கணவருடன் பேசுவதற்காக மீனா அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் செல்போனை இரவல் வாங்கி பேசி வந்துள்ளார். இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. மேலும் சுரேஷ் வெளிநாட்டிற்கு செல்வதற்காக மீனாவிடமிருந்து ரூபாய் 2 லட்சம் பணத்தை கடனாக வாங்கி வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவசர தேவைக்காக சுரேசுக்கு கொடுத்த ரூபாய் இரண்டு லட்சத்தை மீனா திருப்பி கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் சண்டை நடந்துள்ளது. மேலும் இது குறித்து சுரேஷின் பெற்றோரிடம் சென்று உங்களின் மகன் சுரேஷ் வெளிநாடு செல்வதற்காக இரண்டு லட்ச ரூபாய் பணம் கொடுத்தேன் அதனை திருப்பி தாருங்கள் என கேட்டுள்ளார். ஆனால் சுரேஷின் குடும்பத்தினரோ பணத்தை தராமல் மீனாவை நடுரோட்டில் வைத்து அவமானப்படுத்தி அனுப்பி விட்டனர்.
இதனால் அவமானம் தாங்காத மீனா தனது வீட்டுக்கு சென்று கடந்த மாதம் 20ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மீனா தற்கொலை செய்து கொண்ட தகவல் வெளிநாட்டில் இருந்த கணவனுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக உடனடியாக ஊருக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் உறவினர்கள் மூலம் மீனாவின் உடல் சுடுக்காட்டில் எரிக்கப்பட்டது. இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்த மீனாவின் கணவன் பாலசுப்ரமணியன் தனது பிள்ளைகளை பார்த்து கதறி அழுதார். மேலும் தனது மனைவி பயன்படுத்திய செல்போனை ஆன் செய்து பார்த்தபோது அதில் வெளிநாட்டில் இருக்கும் சுரேஷிடம் தினமும் இரவில் நீண்ட நேரம் பேசியதும். அதில் சுரேஷ் மீனாவை கட்டாயப்படுத்தி மிரட்டி நிர்வாணமாக நிற்க வைத்து எடுக்கப்பட்ட வீடியோக்கள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அந்த செல்போனில் கடந்த மாதம் மீனா சுரேஷின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரிடம் பணம் கேட்ட போது என்னை சாலையில் வைத்து அவமானப் படுத்தி விட்டனர். என் சாவிற்கு சுரேசும் மற்றும் அவனது பெற்றோர்கள் மட்டுமே காரணம் என ஒரு வீடியோ பதிவை பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த வீடியோக்களை பார்த்த பாலசுப்ரமணியம் உடனடியாக லால்குடி DSP யிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வெளிநாட்டில் இருக்கும் சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தற்கொலைக்கு தூண்டியது, செல்போன் மூலம் ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.