திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை கோலாலம்பூரில் இருந்து வந்த மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது ஆண் பயணி ஒருவர் தனது பேண்ட் பாக்கெட்டில் 181 கிராம் எடையுள்ள தங்க சங்கிலியை மறைத்து வைத்து எடுத்து வந்தார்.
மேலும் வைத்திருந்த பழைய செல்போனில் 39 மெல்லிய தகடு வடிவில் தங்கம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது அதன் எடை 201 கிராம் ஆகும். கடத்தி வரப்பட்ட மொத்த தங்கத்தின் எடை 382 கிராம் மதிப்பு ரூ.22 லட்சத்து 52 ஆயிரம் ஆகும். தொடர்ந்து விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.