ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் இஸ்லாமிய இயக்கத்தின் மாநில தலைவர் முகமது ஹனிபா, இளைஞர்அமைப்பு மாநில செயலாளர் கமாலுதீன், திருச்சி மக்கள் சேவை அமைப்பின் பொறுப்பாளர் நவாஸ்கான் மற்றும் முனைவர். ஹஜ்மொய்தீன் ஆகியோர் திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இஸ்லாமிய இயக்கத்தின் உறுதிமிக்க போராட்டத்தின் 75ஆண்டுகள் பரப்புரை இயக்கத்தின் ஒருபகுதியாக சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு நடத்தும் சமூக ஒற்றுமைக்கான வாகன பிரச்சார நிகழ்ச்சி நாளை( 19ந் தேதி) காலை 10 மணிக்கு பாலக்கரை ரவுண்டானாவில் தொடங்குகிறது. நாளை தொடங்கும் இந்தப் பிரச்சார நிகழ்ச்சியில் பல்வேறு மாதங்களை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் திண்டுக்கல் ,தேனி கம்பம், மதுரை,விருதுநகர் கரூர்,திருப்பூர் கோவையில் மார்ச் 5-ந் தேதி முடிவடைகிறது. சமூக முன்னேற்றத்தின் அடிப்படையாக விளங்கும் ‘சமூக ஒற்றுமை’ தலைத் தோங்குவதை இலட்சியமாக கொண்டு இந்தவாகன பிரச்சார நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்தியவில்சமூகங்களுக்கிடையே இணக்கமான உறவையும், அன்பையும், நேசத்தையும் கொண்ட முன்மாதிரிமாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. நம்மாநிலத்தில் உள்ள ஒவ்வொருவரும், எந்தவொரு மதத்தைபின்பற்றுபவரும், ஒருவர் மற்றவரை புரிந்து கொள்வதும், நேசம் கொள்வதும் சமூகத்தின்வளர்ச்சிக்கு மிகமுக்கிய பங்காற்றும். ஆனால் சமீபகாலமாக சமூகங்களுக்கிடையே கருத்துப்பரிமாற்றங்களும், புரிந்து கொள்ளுதலும் குறைவாக இருப்பதாக ஜமாஅத் உணர்கிறது. முந்தையதலைமுறையில் இருந்த அன்பும், நேசமும், பரஸ்பர மும்தற்போதைய சூழலில் அரிதிலும் அரிதாகிவிட்டது. இதன் விளைவாக சமூகங்களுக்கு மத்தியில் பிளவுகள் ஏற்படும் அபாயம் நேரிடுகிறது. அவ்வகையில் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் புரிந்துகொண்டு, இணைந்து பணியாற்ற வேண்டும்.
ஆகவே, இளைஞர்கள் தங்களின் வாழ்வை தூய்மையான வாழ்க்கையாக, சமூகத்தின் மீது அக்கறை கொண்ட வாழ்க்கையாக, சமூகத்தின் துயர்துடைப்பில் பங்குகொள்ளும் களப்போராளிகளாக உருவாவதற்கும், அதன்மூலம் சமூகத்தில் அமைதி, நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், சமூகஒற்றுமை, சமூகநல்லிணக்கம் ஆகியவற்றை நிலைநாட்டுவதற்கு பாடுபடும் உன்னதமிக்க இளைஞர்சமூகத்தை கட்டமைப்பதற்கான வழியிலே சாலிடாரிட்டி இளைஞர்அமைப்பு தன்னுடைய பணியை செவ்வனே செய்துவருகிறது.இளைஞர்கள் மத்தியில் மாபெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்கள் நம்சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான பங்களிப்பை ஆற்றுவதற்கான உத்வேகத்தை இந்த வாகன பிரச்சார நிகழ்ச்சிஅளிக்கும் . இவ்வாறு அவர் தெரிவித்தார்.