திருச்சி அருகே தெற்கு காட்டூர் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு இடத்திற்கு உரிமையாளரிடம் முறையான அனுமதி பெறவில்லை என்று மேலும் ஜல்லிக்கட்டு போட்டியை நடைபெறும் பகுதிக்கு சொந்தமான பாப்பா குறிச்சி, கீதாபுரம், காந்திபுரம், வீதி வடங்கம், மஞ்சத்திடல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாட்டின் உரிமையாளர்களுக்கு ஜல்லிக்கட்டு குழுவினர் டோக்கன் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
அதனால் தங்கள் பகுதியில் மாடுகள் வரக்கூடாது என வெளியூரில் இருந்து ஜல்லிக்கட்டு மாடுகளை ஏற்றி வரும் வாகனங்களை மறித்து உள்ளூர் காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு போலீசார் விரைந்து சமரசம் செய்து வந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதிரடியாக ஜல்லிக்கட்டுவாடிவாசல் பகுதியை அதிரடியாக முற்றுகையிட்டு ஜல்லிக்கட்டு போட்டியை நிறுத்துமாறு கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததோடு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.