தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார திருவிழாவான ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்யும் நோக்குடன் தற்போது மீண்டும் 15க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்று கூறி மனு அளித்துள்ள நிலையில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்கம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ளோம் வருகின்ற 23ஆம் தேதி அதற்கான விசாரணை நடைபெறுகிறது.
எனவே முதல் கட்டமாக ஜல்லிக்கட்டு மாடுகளை காட்சிப்படுத்தப்பட்ட விலங்கினங்கள் பட்டியலில் இருந்து அகற்ற வேண்டும் எந்தவித தடையும் இல்லாமல் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கமும் தொடர்ந்து போராடும் என தெரிவித்தார்.
மேலும் தமிழக முதல்வரை சந்திப்பதற்கான முயற்சிகள் எடுத்து வருகிறோம். அதேபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு நடந்த இடங்களை விட ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சட்டம் இயற்றப்பட்ட பிறகு சுமார் 500க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன இனி எதிர்காலங்களிலும் அதிக இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சூழல் உருவாகும் என்று கூறினார். இந்த செய்தியாளர் சந்திப்பில் சங்க நிர்வாகிகள் சூரியூர் ராஜா, ராஜேஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.