திருச்சி பீமநகர் ஆனைக்கட்டி மைதானம் பகுதியை சேர்ந்தவர் ராம்நாத் பாபு உதவி பேராசிரியர். இவர் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார் அதில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நான் திருச்சி பெல் வளாகத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மேலாண்மை நிறுவனத்தில் கடந்த 2001ல் ஓபன் காம்பெடிஷன் மூலம் பேராசிரியராக பணிக்கு சேர்ந்தேன்.


ஆனால் ஆதிக்க சாதியைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் திட்டமிட்டு ஜாதி அடிப்படையில் பணி நிரந்தரம் செய்யும் காலத்தில் பணிநீக்கம் செய்து விட்டார். நான் என்.ஐ.டி., பி ஐ எம் கல்வி நிறுவனங்களில் பிஇ மற்றும் எம்பிஏ பட்டம் படித்துள்ளேன்.
ஜாதிய ரீதியாக உயர் அதிகாரி எனக்கு கொடுத்த துன்புறுத்தல்களை ஆதாரத்துடன் இணைத்துள்ளேன்.
அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மனு அளித்தபோது திருச்சி மாநகர் மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் இந்திரன் உடன் இருந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்