தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க திருச்சி மாவட்ட மாநாடு 2 நாட்கள் நடைபெற்றது. மாநாட்டின் முதல் நாள் பாலக்கரை பகுதியில் கலை இலக்கிய திருவிழா நடைபெற்றது. அதில் மாநில செயற்குழு உறுப்பினர் முத்துநிலவன் சிறப்புரையாற்றினார் மாநாட்டின் இரண்டாம் நாள் ஜோசப் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு இளங்குமரன், கீரை தமிழன், சிவ. வெங்கடேஷ், ஹரிபாஸ்கர், ஹேமலதா ஆகியோர் தலைமை தாங்கினர். மணிகண்டம் வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் அறிக்கை வாசித்தார். கவிஞர் வெற்றி நிலவனின் சங்கத்திடல் ஆவணப் படத்தின் முன்னோட்டத்தை மாதவன் வெளியிட்டார். கவிஞர் ம. செ.எழுதிய வெயில் மரங்கள் கவிதை நூலை மணிகண்டம் வட்டார கல்வி அலுவலர் ஜெயலெட்சுமி வெளியிட்டார்.
மாநாட்டில் ஜாதி பெயர்களில் உள்ள தெருக்களின் பெயர்களை மாற்ற வேண்டும். திருச்சி மாவட்டத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்த அரசே அரங்கங்கள் அமைத்து குறைந்த வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக சிவ.வெங்கடேஷ் மாவட்ட செயலாளராக வி. ரங்கராஜன், மாவட்ட பொருளாளராக ஹரிபாஸ்கர், துணைத் தலைவர்களாக கவிஞர். இளங்குமரன், காளிராஜ், துணைச் செயலாளர்களாக எழுத்தாளர் சீத்தா , பூவிழி தென்றல் உள்ளிட்ட 31 பேர்கள் கொண்ட மாவட்டக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில இணை பொதுச்செயலாளர் களப்பிரன் நிறைவுரை ஆற்றினார். முன்னதாக மாவட்ட பொருளாளர் காளிராஜ் வரவேற்றார். முடிவில் கல்லூரி மாணவர் கிளை தலைவர் பூவிழித்தென்றல் நன்றி கூறினார்.