திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மாவட்ட தலைவர் பாபு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் சௌந்தர்ராஜன், பொதுச் செயலாளர் மெஸ்மர் காந்தன், பொருளாளர் பீர்முகமது,உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கட்டிட வாடகைக்கு 18% வரி விதித்திருந்ததை நீக்கிவிட ஜிஎஸ்டி கவுன்சில்ஒப்புதல் அளித்து இருப்பதாக செய்தி வருகிறது ஆனால் அரசு இதுவரை அரசாணை வெளியிடவில்லை இதை மத்திய அரசு உடனே தெளிவுபடுத்த வேண்டும்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு என்ற பெயரில் கடைகளில் அடாவடி வசூல் செய்வதை உடனடியாக நிறுத்திட வேண்டும். உள்ளாட்சித் துறையின் கீழ் இயங்கும் மாநகராட்சி நகராட்சிகள் பேரூராட்சிகள் பஞ்சாயத்துகள் ஊராட்சி ஒன்றியங்கள் அவற்றின் மூலம் விதிக்கப்படும் சொத்து வரி உயர்வு தொழில் உரிமை கட்டணம் பன்மடங்கு தேர்வு செய்ததை அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,இதில் மாநில செயல் தலைவர்கள் வியாசை மணி, மறையூர் கருப்பையா, மாவட்டச் செயலாளர் வெற்றிவேல் மாவட்ட பொருளாளர் அப்துல் அக்கீம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.