தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அவர்களின் 77 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க நலத்திட்ட உதவிகள் அன்னதானம் மற்றும் பொதுக்கூட்டங்கள் தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட மீனவர் அணி சார்பில் மாவட்ட மீனவர் அணி செயலாளர், மாமன்ற குழு தலைவர் அம்பிகாபதி ஏற்பாட்டில் ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு அருகிலுள்ள லூப்ரா பார்வையற்றோர் இல்லத்தில் அன்னதானம், மற்றும் வயர்லெஸ் ரோட்டில் நீர் மோர் பந்தல் அமைத்து அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் கலந்துகொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஏர்போர்ட் பகுதி கழக செயலாளர் ஏர்போர்ட் விஜி, மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.