தமிழகம் முழுவதும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் திருச்சி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு ஏற்பாட்டில் திருச்சி புத்தூர் அரசு தலைமை மருத்துவமனை அருகில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இந்நிகழ்வில் திருச்சி மாநகர் அதிமுக பகுதி செயலாளர்கள் அன்பழகன், பூபதி, நாகநாதர் பாண்டி, புத்தூர் ராஜேந்திரன், கமாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஜெயஸ்ரீ, பொதுக்குழு உறுப்பினர் மல்லிகா செல்வராஜ், அணி செயலாளர் ராஜேந்திரர், ரஜினிகாந்த் மற்றும் நிர்வாகிகள் கதிரவன், நாகராஜன், அப்துல் சித்தார்த், பாலக்கரை சுரேஷ், புத்தூர் ரமேஷ், மனோஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.