திருச்சி மாவட்டம் திருவானைக்கோவில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தேசிய ஜூனியர் ஜெய்சிஸ் விங் அலுவலக பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்ரீ வரஹ மகாதேசிகன் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் ஜோதி வாழ்த்துரை வழங்கிட ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பிச்சைமணி துவக்க உரையாற்றினார். விழாவில் ஜேஎப்எம் மண்டல துணைத் தலைவர் கஜேந்திரன் மற்றும் ஜேசிஐ மண்டல இயக்குனர் செனட்டர் குமரேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
சிறப்பு அழைப்பாளராக பிஷப் ஹீபர் கல்லூரியின் ஜூனியர் ஜெய்சிஸ் விங் ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஜேசிஐ ராக்டவுன் தலைவருமான டாக்டர் ஜெபஸ்டின் சுதன் ராஜா கலந்துகொண்டு ஜேசிஐ ஜூனியர் ஜெய்சிஸ் விங் புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வில் ஜேசிஐ ஜூனியர் ஜெய்சிஸ் விங் புதிய தலைவராக ரிஷி, செயலாளராக அபிராமி மற்றும் பொருளாளராக நர்மதா ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். மேலும் ஜேசிஐ ஜூனியர் ஜெய்சிஸ் விங் நிர்வாகிகள் மற்றும் செயல் அலுவலர்கள் பதவி ஏற்று கொண்டனர்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் அறிவழகன் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் செய்திருந்தனர். இதில் பிஷப் ஹீபர் கல்லூரி மற்றும் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.