இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்காரின் 133- வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அரிஸ்டோ ரவுண்டானா அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளரும் மாநகர மேயருமான அன்பழகன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அருகில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு என்கிற லெனின் பிரசாத் மாநில பொதுக்குழு உறுப்பினர் கவுன்சிலர்கள் ரெக்ஸ் சோபியா விமலாராணி மாநிலத் துணைத் தலைவர் பேட்டரிக்ராஜ்குமார் கோட்டத் தலைவர்கள் சிவாஜி சண்முகம். ரவி, பிரியங்கா பட்டேல், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்