திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கரின் 68 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது முழு உருவ சிலைக்கு இன்று காலை திருச்சி மாநகர் மாவட்ட அமமுக சார்பில் மாநகர மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் அமமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட அவைத்தலைவர் ராமலிங்கம், மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வக்கீல் பிரகாஷ், ஜங்சன் பகுதி செயலாளர் வெங்கட்ரமணி, மாவட்டத் துணைச் செயலாளர் தன்சிங், நிர்வாகிகள் நெல்லை லட்சுமணன், வேதராஜன், ராமமூர்த்தி, கல்நாயக் சதீஷ், கம்ருதீன், பெஸ்ட் பாபு, உமாபதி, கதிரவன், கருப்பையா, சண்முகம், உள்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
இதேபோல் சட்டமேதை அம்பேத்கரின் 68 ஆவது நினைவு தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அரிஸ்டோ ரவுண்டானத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வெற்றிச்செல்வன், கார்த்திகேயன், ரெங்கராஜன், லெனின், மணிமாறன், மாவட்டக் குழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் வெகுஜன அமைப்பினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.