சட்டமேதை பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரை பாராளுமன்றத்தில் அவமரியாதை செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு ஆணைக்கிணங்க மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் மாநகர செயலாளரும் மாநகர மேயருமான அன்பழகன் முன்னிலையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.. இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்திபாண்டியன், பழனியாண்டி, சேர்மன் துரைராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..