சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் 135 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் திரு உருவ சிலைக்கு திருச்சி மாவட்டம் விசுவ இந்து பரிஷத்தின் சார்பாக மாநில பசு பாதுகாப்பு பொறுப்பாளர் சசிகுமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் என் ஆர் சீனிவாசன், மாவட்ட இணைச் செயலாளர் அழகு யுவராஜ், மாவட்ட பொறுப்பாளர் செந்தில்நாதன், பிரகண்ட பொறுப்பாளர்கள் சுந்தர்ராஜ், பிரபாகரன், ஆனந்தராஜ், பூபதி ராஜா,ஆகியோர் கலந்து கொண்டனர்