சர்வதேச திருச்சி விமான நிலையம் வந்தடைந்த துரை வைகோ எம்பி அவர்கள் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட ஆட்சியர் சரவணன் அவர்களை சந்தித்து பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுபகம் அவென்யூ அல்லித்துறை பஞ்சாயத்தை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் இன்று திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர் அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- குடியிருப்பு பகுதியான சுபகம் அவென்யூ அருகில் டாஸ்மாக் மதுபான கடை திறக்க இருப்பதாகவும் இதனால் குடியிருப்பு வாசிகள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாவார்கள் என்ற காரணத்தினால் அந்த டாஸ்மாக் கடையை திறக்காமல் இருப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் உதவி புரிய வேண்டும் என்கின்ற கோரிக்கையை வைத்தனர்.
மேலும் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள சாக்கடை நீர் குடியிருப்பு வாசிகளின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாகவும் இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் இது தொடர்பாக ஏற்கனவே மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர், வார்டு கவுன்சிலர் ஆகியோருக்கு மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்கள் உடனடியாக இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுத்து மக்களின் பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை மனு அளித்தனர். கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட துறை வைகோ எம்பி அப்பகுதியில் டாஸ்மார்க் திறக்கப்படாது என உறுதியளித்தார்.