டாஸ் அறக்கட்டளை சார்பாக மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை ஊக்குவிப்பதற்காக பதினோராவது ஆண்டாக டாஸ் திறமை விழா என்ற தலைப்பில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் திருச்சி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த விளையாட்டுப் போட்டியை திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். டாஸ் திறமை திருவிழா நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் தினேஷ்குமார் வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்பு குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் தனி திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், ரிலே, நினைவக விளையாட்டுகள், பந்து வீச்சு பால் எரிதல் நீளம் தாண்டுதல் ஈட்டி எறிதல் வட்டு எறிதல் போன்ற விளையாட்டுகள் நடைபெற்றது இந்த விளையாட்டுப் போட்டிகளில் 9 வயது முதல் 21 வயது வரை உள்ள பல்வேறு வயது பிரிவினருக்கான போட்டிகள் நடைபெற்றது இதில் மனவளர்ச்சி குன்றியவர்கள் கீழ்நோய் மன இறுக்கம் பெருமூளை வாதம் பார்வை குறைபாடு லோகோமோட்டிவ் கோளாறு போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் உள்ளவர்களுக்கு இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
இந்த விளையாட்டுப் போட்டியில் மாவட்ட முழுவதும் உள்ள 25 சிறப்பு பள்ளிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட சிறப்பு குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். நாளை திருச்சி வெஸ்ட்ரி பள்ளியில் கலைப்போட்டிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.