திருச்சி சமயபுரம்- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில், தீபாவளியன்று அதிகாலை, வாண வேடிக்கை பட்டாசுகளை பைக் முன்பு பொருத்தி, சாகசம் செய்து, இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட விவகாரம்.
‘டெவில் ரைடர்ஸ்’ என்ற பெயரில் இன்ஸ்டா அக்கவுண்ட் வைத்து, பைக் சாகசம் செய்த, தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன் என்பதும், சாகசத்தை வீடியோ எடுத்தது திருச்சி மாநகரம் கல்லாங்காடு பகுதியை சேர்ந்த அஜய் என்பதும், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்த வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் இருந்து குறிப்பிட்ட நபர்கள் டிலீட் செய்துள்ளனர்.