திருச்சி கிலேதார் தெரு பகுதி (தைலா சில்க்ஸ் பின்புரம்) உள்ள பேமஸ் சலூன் எதிரில் நிறுத்தியிருந்த வண்டி எண் : TN.45.AU – 3334 HONDA ACTIVA WHITE COLOUR வண்டியை நேற்று இரவு சுமார் 01.10 மணியளவில், மர்ப நபர் ஒருவர் திருடி சென்றார்.
இருசக்கர வாகனத்தை திருடும் CC.TV காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது. மேலும் இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் திருச்சி கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் அடிப்படையில் கோட்டை போலீசார் இருசக்கர வாகனத்தை திருடிய திருடனை வலை வீசி தேடி வருகின்றனர்.