நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கிறது. இந்த வெற்றியை அளித்த வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி சமூக வலைத்தளம் மூலம் தனது நன்றியை தெரிவித்துள்ளார். இந்த வெற்றியை இந்தியா முழுவதும் உள்ள பாஜக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றியை கொண்டாடும் விதமாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் பாஜகவினர் வெடி வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். என் நிகழ்வில் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஒண்டி முத்து பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் இந்திரன் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் உடன் இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்:- அப்போது தமிழகத்தில் பாலியல் பலாத்கார வழக்குகள் அதிகமாகி வருகிறது பேருந்து நிலையம் ரயில் நிலையம் மற்றும் பள்ளிகள் எல்லா இடங்களிலும் பாலியல் பலாத்காரம் நடைபெறுகிறது இதனை தடுக்க தவறிய அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது டெல்லியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என கூறிய அரவிந்த் கெஜ்ரிவால் அங்கு தோல்வியை தழுவியுள்ளார் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்பது தெரிந்த விஷயம் தான் முறையான தேர்தல் அங்கு நடைபெறவில்லை மேலும் நாம் தமிழர் கட்சி நல்ல வாக்கு சதவிதத்தை பெற்றுள்ளது என கூறினார்.