திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. திருநங்கைகள் முகாமில் கலந்து கொண்டு தங்களது பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து திருநங்கைகளுக்கான அடையாள அட்டை வழங்கி உரையாற்றினார். இந்த முகாமில் திருநங்கைகள் பயன்படும் வகையில் அவர்களின் ஆதார் அட்டைகளில் உள்ள திருத்தங்கள், சுய உதவி குழுக்கள் மூலம் உதவி பெறுவதற்கான வழிமுறைகள், மேல் படிப்பிற்கான வழிமுறைகளை தெரிவிக்கும் வகையில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஸ்டால்களை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என திருநங்கைகளுக்கு அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:- இன்று நடைபெற்ற நிகழ்வில் இருநூறுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர். அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர். அவற்றை பரிசீலனை செய்து நிறைவேற்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் . திருச்சி மாவட்டம் முழுவதும் கள்ளச் சாராயம் தொடர்பாக ஆய்வு நடைபெற்று அனைத்து துறை அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் எந்தவித தவறு நடந்து விடக்கூடாது என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து கண்காணிக்கப்படும்.
நாள்தோறும் எத்தனை கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு பொருட்கள் எவ்வளவு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பதை தினமும் அறிக்கை வழங்க உத்தரவிடப் பட்டுள்ளது. மேலும், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வார்கள் மீது பாரபட்சமின்றி குண்டர் சட்டம் பதியப்படும் என தெரிவித்தார். மேலும் சில தொழிற்சாலைகளில் மெத்தனாலை எவ்வளவு வாங்குகிறார்கள் எந்த அளவுக்கு அவர்கள் பயன் படுத்துகிறார்கள் என்பது குறித்தும் கண்காணிக்கபடுகிறது. மருத்துவ பயன்பாட்டிற்கும் சில ஸ்பிரிட்டுகள் பயன்படுத்த அனுமதி உள்ளது. மருத்துவ பயன்பாட்டிற்கு அல்லாமல் வேறு எதற்காகவது பயன்படுத்தியது பெரிய வந்தால் மருத்துவமனையை சீல் வைக்கப்படும் என தெரிவித்தார்.