ரயில்வேயில் பாதுகாப்பு பிரிவான இன்ஜினியரிங் பிரிவில் கேட் கீப்பர் பணிகளை ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை ஒப்பந்த முறையில் அமர்த்தும் முடிவினை கைவிட வேண்டும் கிராசிங் கேட்டுகளில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.கேட் டூட்டி பார்ப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கேட் டூட்டி பார்ப்பவர்களை சமூக விரோதிகளிடமிருந்து பாதுகாத்திடவும் பாதுகாப்பு கருவியான ரக்சாக் வழங்க வேண்டும்
என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தட்க்ஷனா ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் ரயில்வே ஜங்ஷன் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட தலைவர் ஆர்.கரிகாலன் தலைமை வகித்தார். கண்டன உரை கோட்ட செயலாளர் .பி .க.மாதவன்,துணை பொதுச் செயலாளர்கள்எஸ் ராஜா. ஆர். சரவணன்,உதவி கோட்ட தலைவர்ஆர். அழகிரி,உதவி கோட்ட செயலாளர்ஆர் ரஜினி ஆகியோர் பேசினர்.உதவி கோட்ட தலைவர் ஆர். சம்பத் நன்றி கூறினார்.