தந்தை பெரியாரை இழிவு படுத்தி பேசி தமிழகத்தை கலவர பூமியாக மாற்றத் துடிக்கும் சீமானை கைது செய்ய கோரி திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியாரின் உருவச் சிலை அருகே மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தலைமையில் ஜனநாயக அமைப்புகளுடன் இணைந்து தொடர் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலாளர் ஜீவா தலைமை தாங்கினார். ம.க.இ.க மாநில பொதுச் செயலாளர் கோவன் கண்டன உரையாற்றினார்,
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், ரெட் பிளாக் கட்சி மாவட்டத் தலைவர் இராமலிங்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் வின்சென்ட், கமலக்கண்ணன், ஆதித் தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் மாணிக்முருகேசன்,புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாவட்ட இணைச் செயலாளர் மணலிதாஸ், மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலாளர் செழியன்,மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் வழக்கறிஞர் ஆதி மற்றும் ஜனநாயக அமைப்பினர் கலந்து கொண்டு சீமானை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பினர். இந்நிலையில் பெரியார் பற்றி சீமான் கூறும் கருத்துக்கள் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கக்கூடிய வகையில் உள்ளது. சீமான் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது:-