திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம், சிறுகனூர் பகுதியில் தனியார் முப்படை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.இந்த பயிற்சி மையத்தில் ராணுவம்,கடற்படை, விமானத்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் பணிபுரிய பயிற்சிகள் மற்றும் எழுத்து தேர்வுகள் குறித்த வகுப்புகள் நடைபெற்று வருகிறது. சமூக வலை தளங்களில் விளம்பரங்களை பார்த்து சுமார் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இங்கு பயின்று வருகின்றனர். சமூக வலைதளத்தில் அகாடமியில் அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் உள்ளது என தெரிவித்து இருந்ததால் இந்த பயிற்சி மையத்தில் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் முப்படை பயிற்சிக்காக சேர்ந்து பயின்று வருகின்றனர். ஆனால் தற்பொழுது இந்த பயிற்சி மையத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் சரியாக இல்லை என கூறி அங்கு பயிற்சி பெற்று வந்த மாணவர்கள் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து மாணவர்கள் கூறுகையில்..,இந்த தனியார் பயிற்சி அகாடமி நடைபெற்று வந்த இடத்தில் குடிநீர் வசதி கழிப்பிட வசதி முறையாக தங்கும் இடமும் இல்லாத காரணத்தால் வேறு ஒரு கட்டிடத்திற்கு தங்க வைத்தனர் ஆனால் தற்பொழுது இந்த கட்டிடத்திலும் மின்சாரம், குடிநீர் இல்லை இது மட்டும் இல்லாமல் 300 நபர்களுக்கு எட்டு கழிப்பறை மட்டுமே உள்ளது. இதன் காரணமாக எங்களுடைய பயிற்சியும் தடை பட்டு உள்ளது. இது குறித்து அகாடமியில் உள்ளவர்களை கேட்கும் பொழுது விருப்பம் இல்லையென்றால் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என கூறுகின்றனர். ஆனால் பணத்தை கொடுங்கள் வேறு அகாடமிக்கு செல்கிறோம் என கூறினால் பணத்தைத் திருப்பித் தர மறுக்கின்றனர். தொடர்ந்து அடிப்படை வசதிகள் இல்லாமல் சவால்களை சந்தித்த நாங்கள் இன்று உண்ணாவிர போராட்டத்தில் இறங்கி உள்ளோம். இன்று மதியத்தில் இருந்து தற்பொழுது வரை உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் மாவட்ட ஆட்சியர் வந்தாலும் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை என வேதனையுடன் தெரிவித்தனர்.