ஏழிசைத் தென்றல் எம்.கே.தியாகராஜ பாகவதரின் 116ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த மாவட்டமான திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது மணிமண்டபத்தில் பல்வேறு அமைப்பினர், கட்சியினர் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதன் ஒரு பகுதியாக விஸ்வகர்மா ஒர்க்கஸ் யூனியன் சார்பில் மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்து தலைமையில் நிர்வாகிகள் சுப்பிரமணி, யுகபாரதி, சந்திரசேகர், வேலு, பழனி, காமராஜ், தங்கதுரை, கணேசன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் தியாகராஜா பாகவதர் உருவச்ச சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு மாநில பொதுச்செயலாளர் மாரிமுத்து அளித்த பேட்டியில்:- நாட்டிற்கு அடிப்படையான தேவைகளை செய்பவர்களில் ஐந்து விஸ்வகர்மா தொழிலாளர்கள் . இவர்களது பிள்ளைகளுக்கு கல்வியில் மேன்மை அடைய தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், தமிழகத்தின் திரை உலகில் முதல் சூப்பர் ஸ்டாராக விளங்கும் எம்.கே.தியாகராஜ பாகவதற்கு எந்தவொரு விழாவும் திரைத்துறையினர் எடுப்பதில்லை.
அவர் விஸ்வகர்மா என்பதினால் அவர்களை ஒதுக்குகிறீர்களா. எனவே நடிகர் சங்கம் அரசியல் கட்சிகள் போல் இல்லாமல் அவருக்கு சிறப்பாக விழா எடுக்க வேண்டும். எங்களது விஸ்வகர்மா சமுதாயத்தை பிசியில் இருந்து எம்பிசிக்கு மாற்ற வேண்டும், தியாகராஜ பாகவதரின் புகழை இந்த இளைய சமுதாயத்தை எடுத்துச் செல்லும் வகையில் அவர் கடந்து வந்த பாதை, சுதந்திர போராட்டத்திற்கான பங்கு குறித்த வரலாற்றை மணிமண்டபத்தில் கண்காட்சியாக கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.