லியோ திரைப்படம் சிறப்பு காட்சிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள சமூக ஆர்வலர் அய்யா திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார்….
லியோ திரைப்படத்தில் சிறப்பு காட்சிகள் வெளியிடக்கூடாது என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம். நாளை திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் 5 காட்சிகளுக்கு அரசு அனுமதி அளிக்க கூடாது. ஏற்கனவே ஒரு திரைப்படம் வெளிவந்த போது ஒருவர் உயிரிழந்தார். குறுகிய நேரத்தில் அதிக காட்சிகள் வெளியிட்டால் கூட்ட நெரிசல் அதிகமாகும். அதனால் மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனவே நடிகர் விஜய் முன்வந்து சிறப்புக் காட்சியை ரத்து செய்ய வேண்டும். நாளை ரசிகர்கள் உயிர் சேதம் ஏதும் ஏற்பட்டால் அதற்கு நடிகர் விஜய் தான் பொறுப்பேற்க வேண்டும்,
தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் ரசிகர்களின் வாக்குகளை பற்றி சிந்திக்காமல் அவர்களது உயிர்களை மட்டும் கருத்தில் கொண்டு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும், இளைஞர்களின் உயிருக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு தர வேண்டும், அரசியலில் வருவதற்கான அடிப்படை தகுதி நடிப்பு மட்டும் அல்ல, சமூக அக்கறையும்தான். தன்னுடைய கலெக்ஷனை மட்டும் சிந்திக்கும் விஜய் தமிழ்நாட்டின் இளைஞர்களை பற்றி கவலை கொள்வதில்லை. 4 மணி காட்சிகள் தரவில்லை என்பதற்காக அரசியலில் வரப்போவதாக போஸ்டர்கள் அடிக்கின்றனர், தனிப்பட்ட பிரச்சனைக்காக அரசியலில் வருவது அசிங்கமாக இல்லையா? தமிழகத்தில் காவிரி பிரச்சினையால் விவசாயிகள் கொந்தளித்து உள்ளனர். இதற்கெல்லாம் குரல் கொடுக்காமல் தன்னுடைய சொந்த பிரச்சினைக்காக அரசியலில் வருவது என்பது வெட்கமாக இல்லையா ? என பேசினர்…