திருச்சி மெயின் கார்டு பகுதியில் உள்ள Holy Cross College 100 வது ஆண்டை கொண்டாடும் விதமாக விளையாட்டு போட்டிகள் நடத்தபட்டது. இதில் பலவிதமான விளையாட்டு போட்டிகளில் மாணவிகள் மிகுந்த உற்சாகமாக கலந்துக்கொண்டனர். பின்பு இன்று மாலை 100 வது ஆண்டு நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிகல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மேயர் அன்பழகன், மாநகர காவல்துறை ஆணையர் காமினி, மற்றும் கல்லூரி முதல்வர் இஸபெல்லா ராஜகுமாரி , மற்றும் ஆசியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர்.
இதனை தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் ..100- வது ஆண்டு விளையாட்டு போட்டிக்கு தகுதியான , சரியான நபரை தான் சிறப்பு விருந்தினராக அழைத்து உள்ளீர்கள். இவர், நேற்று நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற அறப்போராட்டத்தில் எழுப்பிய உரை வரலாற்று சிறப்பு மிக்கது. மனிதன் என்பவர் தெய்வமாகலாம், மற்றவர்களுக்காக உழைப்பவன் தலைவனாகலாம் என சொல்லுக்கு உகந்தவாறு செயல்பட்டார். தொடர்ந்து செயலாளராக இருந்தவர் தற்போது எங்கள் தலைவனாக உள்ளார். மேலும் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதேசமயம் பொது சேவை பணியில் தொடர்ந்து முழுமையாக ஈடுபடுத்தி கொண்ட மிக பெரிய போராளி தான் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவார்.
பெண்கள் அதிக தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். வரும் ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தான் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். தாத்தா உருவாக்கிய துறையை பேரன் வளர்த்து வருகிறார். விளையாட்டு துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதனை பெண்கள் பயன்படுத்திகொள்ள வேண்டும். உழைப்பாளி, போராளி, தமிழ்நாட்டின் வருங்கால முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவார். இந்த நிகழ்ச்சியில் எதிரே உள்ள மைதானம் எப்படி காலியாக உள்ளதோ, அதேபோன்று அமைச்சர் உதயநிதிக்கு எதிரி யாரும் இல்லை என்றார். 100 ஆண்டுகளைக் கடந்த இந்த கல்லூரிக்கு எப்போதும் திமுக அரசு உறுதுணையாக இருக்கும் என்றார்.