திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி அளிக்கையில்,
கடந்த ஆட்சியில் மின் உற்பத்தி 43சதவீதமாக இருந்த நிலையில் கடந்த 4மாதங்களில் மட்டும் 70 சதவீதமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் நிலக்கரி தேவை 56ஆயிரம் டன்னாக உள்ள நிலையில் மத்திய அரசு 60ஆயிரம் டன் நிலக்கரி வழங்குகிறது .நான்கு முதல் ஐந்து தினங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளது. தமிழகத்துக்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசு வழங்கி வருகிறது. தமிழகத்தின் ஒரு நாள் மின்தேவை 14ஆயிரம் மெகாவாட். 4000 மெகாவாட் சூரிய மின்சக்தி தயாரிப்பு பூங்கா அமைக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 216 புதிய துணை மின் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டால் அதனை சமாளிக்கும் வகையில் 1 லட்சம் மின் கம்பங்கள், மற்றும் மின் தளவாடங்கள் தயார் நிலையில் உள்ளது.மின்சார துறை சார்பில் வட்டியாக ஆண்டுக்கு 16ஆயிரம் கோடி செலுத்தப்பட்டு வருகிறது. அதனை குறைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.