தமிழகத்தில் இன்று காலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வௌியானது. பொதுத்தேர்வு முடிவுளை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
12ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி தேர்வு முடிவடைந்தது. இதையடுத்து, 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன் படி தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 9.12 லட்சம் மாணவர்களில் 8.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.67 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.07 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.