தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் திருச்சி மாவட்டம் சார்பில் வாழ்வாதாரம் காக்க கோரி ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக அருகே இன்று நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் சேசு ராஜா மாவட்ட பொருளாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கையையும், தமிழக அரசு கொடுத்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றக் கோரியும், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வாழ்வாதாரம் காக்க கோரிய ஆர்ப்பாட்டத்தை தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கத்தினர் இன்று நடத்தினர்