விஷ்வகர்ம மகாஜன சபை சார்பில் திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல் வாரி துறை ரோடு பகுதியில் உள்ள விஸ்வகர்ம ருத்ரா பூமியில் ஏழிசை மன்னர் எம் கே தியாகராஜ பாகவதர் அவர்களின் 114 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா இன்று நடைபெற்றது. முன்னதாக ஏழிசை மன்னர் எம் கே தியாகராஜ பாகவதர் அவர்களின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ருத்ர பூமியை வாங்கிக் கொடுத்த நமது முன்னோர்களுக்கு நினைவுத்தூன் திறப்பு விழா மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு விஸ்வகர்ம மகாஜன சபை தலைவர் குமரப்பன் ஆச்சாரி தலைமை தாங்கினார் செயலாளர் சுப்பண்ணா ஆச்சாரி பொருளாளர் வெள்ளையன் ஆச்சாரி துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆச்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் விஷ்வகர்ம மகா ஜன சபை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை தொடர்ந்து தலைவர் குமரப்பன் ஆச்சாரி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
விஸ்வகர்ம ருத்ர பூமியில் ஏழிசை மன்னர் எம் கே தியாகராஜ பாகவதர் அவர்களுக்கு நினைவு மண்டபம் கட்டப்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது அதற்கான வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள எம் கே டி அய்யா அவர்களின் கோடான கோடி ரசிகர்கள் மற்றும் அவர்மேல் பற்றுள்ள அனைவரையும் ஒன்றிணைக்கும் விதமாக திருச்சியில் தலைமை அலுவலகம் செயல்பட உள்ளது. குறிப்பாக கர்நாடக சங்கீதத்திற்கு இணையாக தமிழில் அதிக பாடலைப் பாடிய எம் கே தியாகராஜ பாகவதர் அவர்களுக்கு தமிழக அரசால் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது இதில் அவரின் புகழை நிலை நாட்டும் விதமாக ஏழிசை மன்னர் எம் கே தியாகராஜ பாகவதர் என முழு பெயரை கல்வெட்டில் வைக்க தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கிறோம் திறப்பு விழாவில் எம் கே டி ஐயா அவர்களின் உறவுகள் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு அழைப்பு விடுக்குமாறு அரசிடம் கோரிக்கை வைக்கிறோம். என தெரிவித்தார்