தமிழ்நாடு ஆளுநர் ஆ. ன்.ரவி தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தையும், தமிழ்நாட்டையும் அவமரியாதை செய்து வருவதை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் மாநகர செயலாளர் மேயர் அன்பழகன் முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக ஆளுநரை கண்டித்தும், தமிழ்நாட்டை விட்டு ஆளுநரை வெளியேறு என கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் திருச்சி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன் துர்க்காதேவி, மாமன்ற உறுப்பினர்கள் காஜாமலை விஜி முத்து செல்வம் உள்ளிட்ட திமுக கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..