2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் ஏறக்குறைய 12 ஆண்டுகளாக பணியின்றி, அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து முறைசாரா பணியாளர்களாக அல்லல்பட்டு வரும் ஆசிரியர்கள் உண்ணாவிரதம், ஊர்வலம், மறியல், கண்டன போராட்டம், என 80-க்கும் மேற்பட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் எந்தவொரு தீர்வும் எட்டப்படாத நிலையில் 2023 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் நலச்சங்கம் சார்பாக தமிழக அரசு அரசாணை 149 நியமன தேர்வை ரத்து செய்திடக் கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாநிலத் தலைவர் இளங்கோவன் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்: –
இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக:-நியமனத் தேர்வு அரசாணை 149-ஐ முற்றிலும் இரத்து செய்ய வேண்டும், திமுக தேர்தல் வாக்குறுதி வரிசை எண் 177-ஐ நிறைவேற்ற வேண்டும். குறைந்தபட்சம் எங்களை தொகுப்பூதியத்திலாவது பணியமர்த்தி பணி பாதுகாப்பை தந்திட வேண்டும். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தில் பதிவு செய்த எங்களது கோரிக்கையை நிறைவேற்றிட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றி, தமிழக முதல்வர் எங்களது நீண்ட கால பிரச்சனைக்கு தீர்வு காண வழிவகை செய்ய வேண்டும். என வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்த கவன எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது மாநிலத் தலைவர் இளங்கோவன் தனது ரத்தத்தால் தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கோரி தங்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.