ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் தமிழகம் மட்டும் உள்ளது பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி விட்டு செல்வார்கள்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு இன்று மாலை வருகை தந்து சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்து தங்கத்தேரை துர்கா ஸ்டாலின் இழுத்தார். இதனைத் தொடர்ந்து 51 சுமங்கலி பெண்களுக்கு தாலி உள்ளிட்ட மங்களப் பொருட்களை வழங்கினார்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ராஜகோபுரம் அருகே நான்கு சக்கர வாகனம் அனுமதிக்கப்படாத நிலையில் துர்கா ஸ்டாலின் கார் ராஜகோபுரம் முன்பு நிறுத்தி சாமி தரிசனம் செய்த பின்னர் காரில் ஏறி சென்ற சம்பவம் பக்தர்களிடையே முகம் சுளிக்கும் வகையில் சலசலப்பை ஏற்படுத்தியது. சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கத்தேர் இருப்பவர்கள் பணம் செலுத்தி ரசீது வாங்கிய பின்பு தங்கத் தேரை இழுப்பார்கள் ஆனால் துர்கா ஸ்டாலின் தங்க தேருக்கு பணம் கட்டாமல் தங்கத்தேர் இழுத்தர் என்பது குறிப்பிடத்தக்கது.