கல்வி வளாகம் முதற்கொண்டு ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள் தங்கைகள் பெண் குழந்தைகள் என அனைத்து தரப்பு பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள் பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளை கண்டு மன அழுத்தத்திற்கும் வேதனைக்கும் ஆளாகியுள்ளேன். நீங்கள் பாதுகாப்பாகவும் தைரியமாகவும் எந்த சூழ்நிலையிலும் இருக்க வேண்டும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன் என கூறியிருந்தார்.
இந்த அறிக்கையை தமிழகம் முழுவதும் இன்று தமிழக வெற்றிக் கழகத்தினர் துண்டு பிரசுரமாக அளித்து வருகின்றனர் அந்த வகையில் தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் துண்டு பிரசுரம் அளிக்கும் போது கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து திருச்சி மத்திய மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பல்வேறு இடங்களில் மகளிர் அணியினர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையை துண்டு பிரசுரங்களாக பொதுமக்களுக்கு இன்று அளித்தனர்.