தமிழக வெற்றி கழகம் ஆரம்பித்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், மக்கள் சந்திக்கும் அன்றாடப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று கட்சியின் தலைவர் விஜய், த.வெ.க. தொண்டர்களுக்கு ஆணையிட்டுள்ளார். மேலும் கோடை காலம் தொடங்கியுள்ளதால், சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் ஆங்காங்கே நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு பொது மக்கள் அனைவருக்கும் மோர், தண்ணீர் பழம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் அருகே தமிழக வெற்றி கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணி சார்பில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சந்திரா கலந்துகொண்டு குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் தர்பூசணி பழங்கள் வழங்கினார். இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கல்பனா, மகளிர் அணி பொறுப்பாளர் ரேவதி, மகளிர் அணி சரஸ்வதி பாலன் மகளிர் அணி நிவேதா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.
தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் கோயிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் சிறுவர் சிறுமியருக்கு மோர், தண்ணீர் பழம் உள்ளிட்டவற்றை வழங்கினர். வெயிலின் தாக்கத்தில் இருந்த பொது மக்கள் மகிழ்ச்சியோடு மோர் மற்றும் தண்ணீர் பழம் ஆகியவற்றை வாங்கி உட்கொண்டு பலன் அடைந்தனர்.