தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்கவும், பொதுச் செயலாளர் புஸ்ஷி ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திருச்சி மாவட்டம் 28 வது வார்டு பகுதி தென்னூர் அண்ணா நகர் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் புதிய அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இந்த திறப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக வெற்றி கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சந்திரா கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தின் தென்னூர் பகுதி செயலாளர் அப்துல்லா, பொருளாளர் ஷேக், 28வார்டு செயலாளர் ஷேக் அப்துல்லாஹ், செயலாளர் Dr.அப்துல் பாசித் மற்றும் மாவட்டம், வார்டு நிர்வாகிகள்,இளைஞர் அணி, மாணவரணி, தொண்டரணி, நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். மேலும் SDPI மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.