அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலை வரும் அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் நிறுவன தலைவருமான டாக்டர் கே. எஸ். சுப்பையா பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் டாக்டர்கள் ஜான் ராஜ்குமார் , குமார் , கணேசன், மதிக்குமார், சங்கர், சம்பத், வெங்டேன், மகேஸ்வரன், கிருஷ்ணன், பாலு ,ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
கொரோனா நோய்த் தொற்றில் இருந்து மக்கள் விடுபட சித்த மருத்துவத்திற்கு முன்னுரிமை அளித்து வரும் தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் தமிழகத்தில் 50 நடமாடும் சித்த மருத்துவமனைகள் தொடங்கி அமைக்கும் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்கியதற்கு பழனியில் சித்த மருத்துவ கல்லூரி தொடங்க இருப்பதற்கும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
சித்த மருத்துவர்கள் நலன் காக்க தமிழகத்தில் மீண்டும் சித்த மருத்துவ நல வாரியம் அமைத்திட வேண்டும் அக்குபஞ்சர் மருத்துவத்திற்கு தனி கவுன்சில் அமைத்திட வேண்டும் தகுதியான அக்குப்பஞ்சர் மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளில் ஊதியம் இல்லாமல் பணியாற்றிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.