தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக செயல்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களின் புதிய காப்பீட்டு திட்டத்தினை முழுமையாக அரசை ஏற்று நடத்திட வேண்டும் அதில் ஊழியர்களின் பெற்றோர்களை சேர்க்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும். ஏழாவது ஊதிய குழுவின் 21 மாத நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும்.
சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி நடைபெற்றது. திருச்சி மேஜர் சரவணன் நினைவு தூண் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்ற இந்த வாழ்வாதார பேரணியில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.