தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் சுப்பிரமணி, மாவட்ட செயலாளர் விஜய், மாநில பொதுச் செயலாளர் வெங்கடாசலபதி உட்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூடத்திற்கிடையே மாநில தலைவர் சுப்பிரமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்….
தேர்வு நிலை, சிறப்பு நிலையில் பாதிக்கப்பட்ட ஓட்டுநர்களின் தர ஊதிய முரண்பாடுகளை கலைந்து ஊதிய திருத்தம் அமல்படுத்திட வேண்டும். அரசுத்துறையில் ஓட்டுநர் காலி பணியிடங்களை டெஸ்கோ மூலம் பணியமர்த்துவதை கைவிடுத்து வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் காலமுறை ஊதியத்தில் உடனே பணியமர்த்த வேண்டும்.
பல துறைகளில் தினக்கூலி மற்றும் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் ஓட்டுநர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசுத்துறையில் கழிவு நீக்கம் செய்யப்பட்ட வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனம் உடனே வழங்க வேண்டும். ஊர்தி ஓட்டுனர்களை முன் களப் பணியாளர்களாக அறிவித்து கொரோனா பெருந்தொற்று காலங்களில் பணியாற்றிய ஓட்டுனர்களுக்கு,
பிற நிலை அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத் தொகையான 15 ஆயிரம் ரூபாயை போன்று ஓட்டுனர்களுக்கும் 15 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.