அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பதவிகளுக்கான விருப்ப மனுக்களை பெறும் நிகழ்ச்சி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அம்மா மாளிகை வளாகத்தில் இன்று நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக அதிமுக கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு நிர்வாகிகளின் விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டார். அருகில் போக்குவரத்து பிரிவு அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் ரத்தினம் தெற்கு மண்டல அண்ணா தொழிற்சங்க செயலாளர் ரவிச்சந்திரன், மண்டல செயலாளர் ஜெகதீசன், மாவட்டச் செயலாளர்கள் பா குமார் பரஞ்ஜோதி சீனிவாசன் முன்னாள் அமைச்சர் சிவபதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல் மாவட்ட மகளிர் அணி செயலாளர் நசீமா பாரிக் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் தங்கமணி நிருபர்கள் அளித்த பேட்டியில் கூறியதாவது:- திருச்சி மண்டலத்தில் போக்குவரத்து கழகத்துடைய தொழிற்சங்க தேர்தலுக்காக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக நிர்வாகிகளிடமிருந்து விருப்ப மனுக்களை வாங்குவதற்காக திருச்சி மண்டலத்திற்கு இன்று வருகை தந்துள்ளேன். அந்த வகையில் இன்றைய தினமும் நாளைய தினமும் விருப்பமுள்ளவர்கள் எந்தெந்த பதவியில் போட்டியிட விரும்புகிறார்களோ அவர்களெல்லாம் எங்களிடத்தில் மனுக்களை கொடுக்கலாம் அதற்கு பின்னால் அதிமுக கழக பொதுச்செயலாலர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களோடு ஆலோசித்து தகுதியான நபர்களை தலைவர் செயலாளர் துணைத் தலைவர் செயலாளர் ஆகிய பதவிகளுக்கு பொதுச் செயலாளர் மூலம் அறிவிக்கப்படுவார்கள். அதற்காக இன்றைய தினம் மனுக்களை வாங்க வந்துள்ளேன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையா இருக்க வேண்டும் மேலும் வருகிற 2026 ம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைய அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. மேலும் மாவட்ட செயலாளர் குறித்து வட்டச் செயலாளர்கள் எடப்பாடியிடம் கொடுக்கப்பட்ட புகார் மனு குறித்த நிருபர்களின் கேள்விக்கு:- பொதுச் செயலாளர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பொதுச் செயலாளர் அனைவரையும் அரவணைத்து பேசி வருகிறார் இது குடும்பத்திற்குள் பிரச்சனைகள் நடப்பது சகஜம் தான் அதை பேசி தீர்த்துக் கொள்வோம் என தெரிவித்தார்.