கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி கட்டத்தின்படி வெளியிட்ட அரசாணை 2d எண் 62 தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு துறை சார்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஊதியம் நிர்ணயம் செய்து அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டது அந்த நிலுவைத் தொகையை வழங்க கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ ஐ டி யு சி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழக முழுவதும் தொழிலாளர் இணை அலுவலகம் அருகில் காத்திருக்க போராட்டம் நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக திருச்சி கல்லுக்குழி பகுதியில் உள்ள மாவட்ட தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் இன்று நடைபெற்றது.
இந்த காத்திருப்பு போராட்டத்தை ஏ ஐ டி யு சி மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணசாமி தொடங்கி வைத்து கண்டன உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து கோரிக்கைகளை விளக்கி மாவட்ட பொதுச் செயலாளர் கவுன்சிலர் சுரேஷ் விளக்க உரையாற்றினார். இந்த காத்திருப்பு போராட்டத்தின் கோரிக்கைகளாக மேல்நிலை தொட்டி இயக்குபவர்களுக்கும் ஊராட்சியில் பணிபுரியும் கணினி இயக்குபவர்களுக்கும் 14, 503 ரூபாயும் அதே போல் தூய்மை பணியாளர்களுக்கு 12 ஆயிரத்து 503 ரூபாய் குறையாமல் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க கோரியும்
அதேபோல் தூய்மை காவலர் பள்ளி சுகாதாரத் தூய்மை பணியாளர் மகளிர் திட்ட தொழிலாளர்களுக்கு 12,503 வழங்க கோரியும் சுகாதார ஊக்குனர்களுக்கு 15,503 ரூபாய் வழங்கக் கோரியும் மேலும் ஊராட்சி ஒன்றியங்கள் மாவட்ட அளவிலான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஊழியர்களுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி சம வேலைக்கு சம ஊதியம் என்ன செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஏ ஐ டி யு சி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.