தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி அனைத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க கால முறை ஊதியம் பனி நிரந்தரம் பெற போராட்டம் குறித்து மாநில அளவிலான நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டம் திருச்சி ஹோட்டல் அருண் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது இந்தக் கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட பொறுப்பாளர் சுமதி வரவேற்புரை வழங்கிட மாநில தலைவர் வாலண்டின் பிரிட்டோ தலைமை தாங்கினார்.
இந்த கலந்தாய்வுக் கூட்டத்தின் கோரிக்கையாக கல்வி துறையோடு இணைந்து கால முறை ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்த வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாநில அளவிலான நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் மாநில கணக்கு மேலாளர் சக்திவேல் கட்டிட பொறியாளர் மாரியப்பன் மாநில பொதுச் செயலாளர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் கோரிக்கைகளை குறித்து விளக்க உரையாற்றிய மாநில பொருளாளர் மகாலிங்கம் மாநில செயலாளர் கோதண்டராமன் மாநிலத் துணைத் தலைவர் பெரியசாமி மற்றும் திருச்சி மாவட்ட தலைவர் பால்பாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.