தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் திருச்சி மறை மாவட்டம் சார்பில் மது போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது இந்த விழிப்புணர்வு பேரணிக்கு திருச்சி மறை மாவட்டம் இளைஞர் இயக்கத்தின் ஆயர் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக திருச்சி மாநகர போலீஸ் உதவி கமிஷனர் பழனிச்சாமி கலந்துகொண்டு போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு பேரணியானது தூய மரியன்னை பேராலயம் முன்பு தொடங்கி மேலப்புதூர் தலைமை தபால் நிலையம் வழியாக பாரதிதாசன் சாலை பீமன் நகர் வழியாக சென்று மீண்டும் பேராலயத்தை அடைந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியில் போதைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை எழுதியபடி இளைஞர்கள் கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.
முன்னதாக திருச்சி மறை மாவட்டம் இளைஞர் பணி குழு சார்பில் யூபிலி ஆண்டு இளைஞர் எழுச்சி ஞாயிறு கொண்டாட்டம் மற்றும் ரத்ததான முகாம் திருச்சி மேலப்புதூர் நல்லாயன் நிலையத்தில் இன்று நடைபெற்றது. இதில் திருச்சி மறை மாவட்ட முதன்மைகுரு பேரருள்பணி அந்துவான், திருச்சி மறை மாவட்ட இளைஞர் பணிகுழு செயலாளர் அருள்பணி பிரான்சிஸ் செலஸ்டின், திருச்சி மறை மாவட்ட இளைஞர் இயக்க தலைவர் ஆகாஷ் மற்றும் திருச்சி மறை மாவட்ட இளைஞர் இயக்க நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.