தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இலக்கிய அணி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் – சிவாஜிகணேசன் நினைவுநாள் – குமரிஅனந்தன் நினைவேந்தல் உள்ளிட்ட முப்பெரும் விழா மாநில தலைவர் புத்தன் தலைமையில் மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் ரெக்ஸ், தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜன், வடக்கு மாவட்ட தலைவர் கலை ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தேசிய செயளாலர் கிறிஸ்டோபர் திலக், செய்தி தொடர்பாளர் வேலுசாமி, மாநில பொதுச்செயலாளர் பெனட் அந்தோணிராஜ் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் முருகேசன், பொருளாளர் முரளி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 24 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி புத்தூரில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கவுன்சிலர் ரெக்ஸ் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இலக்கிய அணி தலைவர் புத்தன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்வில் பத்மநாபன், ஜெயப்ரியா, சிவா வைத்தியநாதன், படேல், உறந்தை செல்வம், அனலை ராஜேந்திரன், அப்பச்சி சபாபதி, ஆலடி சங்கரய்யா, சிந்தை தருமன், கோட்ட தலைவர்கள்: மலர் வெங்கடேஷ், பகதுர்ஷா, வெங்கடேஷ் காந்தி, பாக்கியராஜ், ராஜா டேனியல், அழகர், கனகராஜ், பிரியங்கா படேல், ஜெயம் கோபி, ராணுவ பிரிவு ராஜசேகரன், பூக்கடை பன்னீர், கலை பிரிவு அருள், இளைஞர் காங்கிரஸ் விஜய் படேல்,ஆராய்ச்சி பிரிவு பாண்டியன், எஸ்சி பிரிவு கலியபெருமாள், மகிளா காங்கிரஸ் ஷீலா செலஸ், அஞ்சு, ஆர் டி ஐ கிளமெண்ட், சிறுபான்மை பிரிவு பஜார் மொய்தீன், மனித உரிமை துறை எஸ் ஆர் ஆறுமுகம், விவசாய பிரிவு அண்ணாதுரை, ஐ டி பிரிவு டேவிட், வார்டு தலைவர்கள் கிருஷ்ணன், கண்ணன், பாண்டியன், பெரியசாமி, ரமேஷ், செபஸ்தியார், மூர்த்தி, சையது பாய், செல்வராசு, அன்பு ஆறுமுகம், MRJ ஆரிப், பரமசிவம், முகமத் ரபிக், செல்வம், உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.