திமுக கழக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் திருச்சியில் 47 நிகழ்வுகளாக நடத்தப்பட்டு வருகிறது அதன் ஒருபகுதியாக இன்று காலை மாபெரும் இரத்தான முகாம் தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் வரவேற்புரையாற்றிட திமுக தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் , பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக திமுக கழக மருத்துவ அணி துணைத்தலைவர் கம்பன் கலந்து கொண்டு இரத்ததானத்தை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மாவட்டக் கழக நிர்வாகிகள் சேகரன், சபியுல்லா, கோவிந்தராஜ், செங்குட்டுவன், மூக்கன், குணசேகரன், பகுதி கழகச் செயலாளர் மோகன் மற்றும் மாவட்ட ஒன்றிய பகுதி கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் துணை முதல்வர் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வயதை குறிக்கும் குறிக்கும் விதமாக 47 நபர்கள் முகாமில் ரத்த தானம் செய்தனர். ரத்த தானம் செய்த நபர்களுக்கு ஊட்டச்சத்து உணவும் சான்றிதழும் வழங்கப்பட்டது. முடிவில் தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன் நன்றி கூறினார்.